ஈரோடு மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில் ஆணழகன் போட்டி இன்று (ஆக.1) நடைபெற்றது. இதில் சத்தியமங்கலம், கோபி, பவானி, ஈரோடு, பெருந்துறை ஆகிய பகுதிகளிலிருந்து 50-க்கும் மேற்பட்ட ஆணழகன் போட்டிக்கு வந்திருந்தனர்.
இதில் பல்வேறு பிரிவுகளில் காவிலிபாளையத்தைச் சேர்ந்த சாம்பியன் ஜிம் நடத்தி வரும் மணிகண்டன் என்கிற தினேஷ்குமார் 'மிஸ்டர் ஈரோடு' ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு சான்றிதழ், கோப்பை வழங்கப்பட்டது.
மேலும், கிராமப்புறத்தில் உடற்பயிற்சி அவசியத்தை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: CWG 2022: பளுதூக்குதலில் தங்கம் வென்றார் அச்சிந்தா ஷூலி!