சத்தியமங்கலம் : பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, கட்டாயம் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தினசரி 100 நபர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சமூக இடைவெளி எங்கே?
இந்நிலையில், நேற்று ஜனவரி 10ஆம் தேதி, மாலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சிக்கரசம் பாளையத்தின் ரேஷன் கடையில் எந்தவித கட்டுப்பாடுகளையும் அலுவலர்கள் அமல்படுத்தவில்லை.
இதனால், பொதுமக்கள் முக கவசம் அணியாமல் சமூக இடைவெளி இன்றி கூட்டம் கூட்டமாக நின்று பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதில் ஆர்வம் காட்டினர். கரோனா குறித்து எந்த அச்சமும் இல்லாமல் பொதுமக்கள் கூடியதால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் கூடும் இடங்களில் கரோனா வைரஸ் பரவும் அபாயத்தைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் பொது விநியோக திட்ட அதிகாரிகள் அலட்சியத்தால் ரேஷன் கடைகளில் கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: ஜெ.பி. நட்டாவுக்கு கரோனா தொற்று