ETV Bharat / city

உள்ளாட்சியில் வெற்றிபெற்றால் மட்டும் வாருங்கள்: செங்கோட்டையன் கண்டிப்பு - திமுக ஆட்சியில் நகை கடன் தள்ளுபடி ஆகாது

ஈரோடு மாவட்ட தேர்தல் பரப்புரையில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டும் வாருங்கள் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பிரசாரத்தின்போது கண்டிப்புடன் கூறினார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
author img

By

Published : Feb 13, 2022, 1:49 PM IST

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் அதிமுக சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ. செங்கோட்டையன் நேற்று (பிப். 12) தீவிர தேர்தல் பரப்புரயில் ஈடுபட்டார்.

தேர்தல் பரப்புரையின்போது, செங்கோட்டையன் பேசியதாவது, "உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டும் என்னிடம் வாருங்கள். தற்போது தேர்தலில் திமுக ஆயிரம் ரூபாய் கொடுப்பார்கள். அதை, வாங்கி வாக்களித்தால் ஆண்டுதோறும் பொங்கல் பரிசும், மாதந்தோறும் ஆயிரம் ரூபாயும் தரமாட்டார்கள். எனவே, விழிப்புணர்வோடு இருங்கள்.

நகைக்கடன் தள்ளுபடி ஆகாது!

திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எனவே, அதிமுகவுக்கு வாக்களித்து, அவர்களை புறக்கணியுங்கள். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு, கூட்டுறவு சங்கங்களில் ஐந்து சவரன் வரை அடமானம் வைத்து நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பரப்புரை

தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவினர், தற்போது ஆட்சியில் உள்ள நிலையில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்குச் சான்றிதழ் வழங்காமல் உள்ளனர். அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால், இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்காது. திமுக ஆட்சியில் நகைக்கடன் தள்ளுபடி ஆகாது. அசலுடன் சேர்த்து வட்டி தொகையை கட்டினால் மட்டுமே நகை உங்களுக்கு திரும்ப கிடைக்கும்" என்றார்.

இதையும் படிங்க:மக்கள் பாஜகவை நம்பி வாக்களிப்பார்கள் - நடிகை குஷ்பு பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.