ETV Bharat / city

தங்களை அழைக்காமல் ஜவுளி வளாகத்தை திறந்து வைத்த முதலமைச்சர்.. வேதனையில் வியாபாரிகள் - erode

ஈரோட்டில் புதியதாக கட்டிய புகழ்பெற்ற 'அப்துல் கனி' ஜவுளி வணிக வளாகம் திறப்பு விழாவில் வியாபாரிகளுக்கு அழைப்பு கொடுக்காமல் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்ததாக வியாபாரிகள் வேதனைத் தெரிவித்துள்ளனர்

வியாபாரிகளுக்கு அழைப்பு விடுக்காமல் ஜவுளி வணிக வளாகத்தை திறந்து வைத்த முதலமைச்சர்

author img

By

Published : Aug 31, 2022, 5:36 PM IST

ஈரோடு: ஆசிய அளவில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் ஊராக ஈரோடு உள்ளது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் அமைந்துள்ள நூறு ஆண்டுகள் பழமையான அப்துல் கனி ஜவுளிச்சந்தையில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

வாரம்தோறும் நடைபெறும் ஜவுளிச்சந்தையில் ஜவுளி ரகங்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மட்டும் இன்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஜவுளி விற்பனையாளர்கள் ஜவுளி ரகங்களை கொள்முதல் செய்து செல்கின்றனர். இதன் காரணமாக, ஆண்டு ஒன்றுக்கு பலநூறு கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா 'அப்துல் கனி' ஜவுளிச்சந்தையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிய வணிக வளாகம் அமைக்கப்பட்டு, ஏற்கெனவே இருந்த வியாபாரிகளுக்கு கடைகளை வழங்கிய பின்பு, பழைய கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

'அப்துல் கனி' மார்க்கெட் ஜவுளி வியாபாரிகளுக்கு அழைப்புவிடுக்காமல், கடந்த 26ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் கட்டி முடிக்கப்பட்ட அப்துல் கனி ஜவுளி வணிக வளாகத்தை திறந்து வைத்தார்.

அதில் ஏற்கெனவே அங்கு வியாபாரம் செய்த ஜவுளி வியாபாரிகளுக்கு கடைகளை முறையாக ஒதுக்கீடு செய்யாமல் மாநகராட்சி அலுவலர்கள் கடைகளை அகற்ற வேண்டும் என மிரட்டல் விடுப்பதாகவும், மாநகராட்சி வாகனத்தில் ஜவுளி பொருட்களை எடுத்துச்சென்று விடுவோம் என தகாத வார்த்தையில் பேசி மிரட்டல் விடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

வியாபாரிகளுக்கு அழைப்பு விடுக்காமல் ஜவுளி வணிக வளாகத்தை திறந்து வைத்த முதலமைச்சர்

மேலும் தீபாவளிப்பண்டிகை நெருங்கி வருவதால் வியாபாரிகளுக்கு மாநகராட்சி அலுவலர்கள் முறையாக கடைகளை ஒதுக்கீடு செய்த பின்பு, தற்போது செயல்படும் கடைகளை அகற்ற வேண்டும் என்றும் தீபாவளிப் பண்டிகையில் வியாபாரம் பாதிக்கப்படும் என்றும்; 100க்கும் மேற்பட்ட அப்துல் கனி ஜவுளிச்சந்தை வியாபாரிகள் ஈரோடு மாநகராட்சிக்கு ஊர்வலமாக வந்து மேயர் மற்றும் அலுவலர்களிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிங்க: அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள நீர் உந்து நிலையம்... முதலமைச்சர் ஆய்வு...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.