ஈரோடு மாவட்டம் சூளை காவேரி நகர் ஏழாது வீதியில் செந்தில்குமார் என்ற தொழிலதிபர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். டெக்ஸ்டைல்ஸ் பிராசசிங் மில் நடத்தி வரும் செந்தில்குமார் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக எழுமாத்தூரில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றிருந்தார்.
இந்நிலையில் இன்று வீடு திரும்பிய அவர் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவினுள் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து வீரப்பன் சத்திரம் காவல் துறையில் இதுகுறித்து புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கைரேகை நிபுணர்களின் உதவியுடன் சோதனை நடத்தி, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:
திருப்பத்தூரில் 11 சவரன் நகை கொள்ளை- காவல் துறையினர் வலைவீச்சு