ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த, பண்ணாரி வனப்பகுதியில் பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்வார்கள். அதோபோல ஆண்டுதோறும் நடக்கும் குண்டம் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதருவார்கள்.
இந்த குண்டம் விழா கரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடக்கவில்லை. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் மார்ச் 7ஆம் தேதி முதல் குண்டம் விழா தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் சார்பில், "குண்டம் விழா மார்ச் 7ஆம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கும்.
இதையடுத்து 15ஆம் தேதி சப்பரம் திருவீதியுலா, 21ஆம் தேதி தீக்குண்டம் வார்ப்பு விழா, 22ஆம் தேதி குண்டம் இறங்குதல் விழா நடைபெறும். இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. முதல்கட்டமாக 47 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சீரமைப்பு பணிகள் நடந்துவருகின்றன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பண்ணாரி அம்மன் கோயில் மூடல்: நுழைவுவாயில் முன்பு பக்தர்கள் சாமி தரிசனம்