ETV Bharat / city

ஊரடங்கு நேரத்தில் சாலையோர மக்களின் பசியாற்றிய அம்மா உணவகம் - lockdown 2022

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சமயத்தில் சாலையோர மக்கள், ஆதரவற்றோர் எனப்பலரும் அம்மா உணவகங்களில் உணவருந்தினர்.

amma canteen
அம்மா உணவகம்
author img

By

Published : Jan 16, 2022, 10:57 PM IST

ஈரோடு: தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்டதால், அனைத்து உணவகங்களும் மூடப்பட்டன. இதனால் சாலையோர வியாபாரிகள், ஆதரவற்றோர் உணவுக்கு சிரமப்பட்டனர்.

ஊரடங்கு நாளான இன்று (ஜனவரி 16) சொற்ப எண்ணிக்கையிலான கடைகள் மட்டுமே பார்சல் சேவை வழங்கின. தனியார் கடைகளில் விலை அதிகம் காரணமாக, சாலையோரத்தில் வசிக்கும் எளிய மக்கள் அம்மா உணவகங்களை நாடினர்.

அம்மா உணவகம்

சத்தியமங்கலம் நகராட்சி அம்மா உணவகத்தில் 250 பேருக்கு இட்லி, தோசை, பொங்கல் வழங்கப்பட்டது.

இதனால் சாலையோரங்களில் வசிக்கும் ஏழைகள், மூட்டை தூக்குவோர், ஆதவற்றோர் அம்மா உணவகங்களால் பயனடைந்தனர். மேலும், தமிழ்நாடு-கர்நாடகா இடையே லாரியை இயக்கும் ஓட்டுநர்கள் அம்மா உணவகங்களில் உணவு உண்டனர்.

ஊரடங்கில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் சூடான உணவு கிடைத்துள்ளதாகவும்; அம்மா உணவகங்கள் தொடர்ந்து ஊடரங்கு நாள்களில் மூன்று வேளையும் செயல்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.

இதையும் படிங்க: ஜிப்மர் மருத்துவமனையில் ஜனவரி 18ஆம் தேதி முதல் தொலைபேசி மருத்துவ ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.