ETV Bharat / city

'அமைச்சரின் பேச்சு அறியாமையைக் காட்டுகிறது' - ஆ. ராசா கண்டனம்

ஈரோடு: திமுக உள்ளாட்சி அமைப்பிற்கு நிதி ஒதுக்க மாட்டோம் என்று அமைச்சர் கூறியுள்ளது அவரின் அறியாமையைக் காட்டுகிறது என ஆ. ராசா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சத்தியமங்கலத்தில் ஆ ராசா பேட்டி
சத்தியமங்கலத்தில் ஆ ராசா பேட்டி
author img

By

Published : Jan 27, 2020, 10:28 AM IST

நீலகிரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட்டு வென்ற திமுக கூட்டணி உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு திமுக சார்பில் சத்தியமங்கலத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் நீலகிரி மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா பங்கேற்று பாராட்டுகளைத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஆ.ராசா , " மத்திய அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள்தொகையின் அடிப்படையில் ஒரு அளவுகோல் வைத்து நிதி வழங்குகிறது. மத்திய அரசுடன் சிறு தொகை சேர்த்து மாநில அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இந்த அடிப்படை பண்பு கூட தெரியாத அமைச்சர் கருப்பண்ணன், திமுக உள்ளாட்சித் தலைவர்களுக்கு நிதி ஒதுக்க மாட்டோம். குறைந்தளவே ஒதுக்குவோம் எனக்கூறுவது அவரின் அறியாமையைக் காட்டுகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இப்படி பேசுகிறார்" என்றார்.

சத்தியமங்கலத்தில் ஆ. ராசா பேட்டி

மேலும், "ஒரு வேளை மத்திய அரசு திட்டமிட்டு நிதி ஒதுக்கவில்லையென்றால், நீலகிரி மக்களவைத் தொகுதி நிதியிலிருந்து உள்ளாட்சிக்கு நிதி ஒதுக்கி திமுக பிரதி நிதிகள் சிறப்பாகப் பணியாற்ற உதவுவோம்" என்றும் ஆ. ராசா தெரிவித்தார்.

இதையும் படிங்க:

விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் கீழடிக்கு சென்ற பொதுமக்கள்

Intro:Body:tn_erd_03_sathy_mp_rasa_byte_tn10009

திமுக உள்ளாட்சி அமைப்பிற்கு நிதி ஒதுக்க மாட்டோம் என அமைச்சர் பேச்சுக்கு நீலகிரி எம் பி ஆ ராசா கண்டனம்

சத்தியமங்கலம்
ஈரோடு மாவட்டம், நீலகிரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட்டு வென்ற திமுக கூட்டணி உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு திமுக சார்பில் இன்று சத்தியமங்கலத்தில் பாராட்டு விழா நடைபெற்றது இதில் நீலகிரி மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ ராசா பங்கேற்று பாராட்டு தெரிவித்தார் அப்போது செய்தியாளரிடம் கூறுகையில் அரசியல் சாசனப்படி பதவிப் பிரமாணம் செய்து கொண்ட முன்னாள் அமைச்சர் திமுக உள்ளாட்சிப் தலைவர்களுக்கு நிதி ஒதுக்க மாட்டோம் குறைந்தளவே ஒதுக்குவோம் எனக்கூறுவது தற்குறி தனமானது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவது தெரிகிறது.மத்திய அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள்தொகை அடிப்படையில் ஒரு அளவுகோல் வைத்து நிதி வழங்குகிறது மத்திய அரசுடன் சிறு தொகை சேர்த்து மாநில அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது இந்த அடிப்படை பண்பு கூட தெரியாத அமைச்சர் நிதி ஒதுக்க மாட்டேன் எனக் கூறுவது தற்குறி தனமானது ஒருவேளை அமைச்சர் திட்டமிட்டு நிதி ஒதுக்கவில்லை என்றால் நீலகிரி மக்களவைத் தொகுதி நிதியிலிருந்து அவர்களுக்கு நிதி ஒதுக்கி திமுக பிரதிநிதிகள் சிறப்பாக பணியாற்ற உதவுவோம் என்றார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.