ஈரோடு மாநகர பகுதிகளின் அனைத்துப் பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாக தனியார் நிறுவனத்தின் அதிவேக இணையதள வசதி கொண்ட இணைப்புக்களை வீடுதோறும் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வீடுகளுக்கு இணைப்புகள் வழங்குவதற்காக பைபர் குழாய்கள் பதிக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, சஞ்சய் நகர் பகுதியில் இந்த பணி நடைபெற்றிருந்தபோது, இதில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் பவானியைச் சேர்ந்த முருகன் ஆவார். திடீரென மின்சாரம் தாக்கியதில் அப்பகுதியிலுள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சார இணைப்புகளில் பிரச்னை ஏற்பட்டது.
இதனால் ஏசி, பிரிட்ஜ், மின்விசிறி, மடிக்கணினி உள்ளிட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்சாதனப் பொருட்கள் சேதமடைந்தன. இதுகுறித்து வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், இணையதள வசதி இணைப்பு ஒயருடன், மின்சார இணைப்புக்கான ஒயரும் மாட்டிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;