ETV Bharat / city

சாலை விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழப்பு!

author img

By

Published : Jul 13, 2020, 9:53 PM IST

ஈரோடு: மதுபாட்டில்கள் கடத்திவந்தவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Colleage Girl Dead By Road Accident
Colleage Girl Dead By Road Accident

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், திகினாரை பகுதியைச் சேர்ந்த ரங்சாமி என்பவரின் மகள் சுதா (20). இவர் மைசூரில் தங்கி சட்டம் பயின்று வந்தார். இந்நிலையில், ரங்கசாமி, தனது மனைவி மதேவம்மா, மகள் சுதா ஆகியோருடன் விவசாயத் தோட்டத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கரளவாடி என்ற இடத்தில் வேகமாக வந்த இருசக்கர வாகனம், சுதா மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த சுதா, சாம்ராஜநகர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மத்தி என்பவரை காவல் துறையினர் பிடித்து விசாரித்தபோது, ஒரு பெட்டியில் 10-க்கும் மேற்பட்ட மதுபாட்டில் கடத்திச் சென்றது தெரியவந்தது.

மதுகடத்தலின்போது இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியதால், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என தாளவாடி காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 11 குற்றவாளிகள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.