கரோனா நோய் தொற்று காரணமாக தமிழ்நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, நகர்ப்பகுதிகள் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகின்றன. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கரோனா சிகிச்சை முடிந்து 2 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் நோய் தொற்று பரவாமல் இருக்க 6 ஆயிரத்து 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
சத்தியமங்கலம் காவல் துறை மற்றும் நகராட்சி சார்பில் தனிமைப்படுத்தப்பட்ட 16 வீதிகளில் காய்கறி, ரேஷன் கடை போன்ற அத்தியாவசிய பொருள்கள் விநியோகம் மற்றும் கிருமி நாசினி தெளிப்பு போன்ற நடவடிக்கைகள் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. இதில் சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் நடுவே ஓடும் பவானி ஆறு ரம்யமாக காட்சியளிக்கிறது
பெரிய பள்ளி வாசல் வீதி, பெரியகோவில், பிஎஸ்என்எல் அலுவலகம் ஆகிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. சத்தியமங்கலம் புதிய பேருந்து நிலையத்தில் பிரியும் கோவை மற்றும் ஈரோடு சாலை ஆகியவையும் வெறிச்சோடின.
இதையும் படிங்க: