ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள வன உயிரின சரணாலயம் மற்றும் புலிகள் காப்பகம் சுமார் 1,408.4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடையது. 2013ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் நான்காவது புலிகள் காப்பகமாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அறிவிக்கப்பட்டது. சத்தியமங்கலம், ஆசனூர் வனக்கோட்டத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பறவைகள், வண்ணத்துப்பூச்சிகளின் கணக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த கணக்கெடுப்பில் இயற்கை ஆர்வலர்கள் 91 பேர், வன களப்பணியாளர்கள் 150 பேர் பங்கேற்றனர். இவர்கள் வன ஊழியர்களின் மேற்பார்வையில் 20 குழுக்களாக பிரிக்கப்பட்டு வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுப்பு விபரங்கள் பற்றிய பயிற்சி மேற்கொண்டனர்.
இந்த கணக்கெடுப்பில் சிங்கள ஐந்து வளைய பட்டாம்பூச்சி, காமன் ஓனிக்ஸ் பட்டாம்பூச்சி, நீலகிரி டிட் பட்டாம்பூச்சி போன்ற அரிய வகை பட்டாம்பூச்சிகள் இருப்பது தெரியவந்தது. இதில் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையிலும் இலங்கையிலும் வாழும் நீலகிரி டிட் பட்டாம்பூச்சி கிழக்குத் தொடர்ச்சி மலையில் இருப்பதற்கான முதல் பதிவாகும். இப்போது இப்பகுதியில் 281 பறவை இனங்கள், 184 பட்டாம்பூச்சி இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ன.
இதையும் படிங்க:
தாய்வீட்டிற்கு வட்டமிடும் வண்ணத்துப்பூச்சிகள்...பார்க்க மிஸ் பண்ணாதீங்க!