ஈரோடு: சத்தியமங்கலம் பகுதியில், வீடில்லா ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் குடிசை மாற்று வாரியம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சத்தியமங்கலம் நகராட்சி பகுதியிலுள்ள குள்ளங்கரடு பகுதியில் 416 வீடுகள், ராஜன் நகர் ஊராட்சியில் உள்ள புதுவடவள்ளி பகுதியில் 528 வீடுகள், கொத்தமங்கலம் ஊராட்சியில் உள்ள இக்கரைதத்தப்பள்ளி பகுதியில் 480 வீடுகள் என மொத்தம் 1424 வீடுகள், ரூபாய் 100 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது.
வீடில்லா ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் இந்த வீடுகள் வழங்குவதற்காக, பயனாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதன்மூலம், தகுதியான பயனாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆட்சியரிடம் ஒப்புதல் பெற்ற பின், வீடுகள் வழங்கப்படும். இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் 6 மாதங்களில், கட்டட பணிகள் முடிவடைந்த பின்னர் பயனாளர்களிடம் வீடுகள் ஒப்படைக்கப்படும் என குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வேளாண் அலுவலர் வீட்டில் 11 சவரன் நகை கொள்ளை