ETV Bharat / city

இருநாட்டுத் தலைவர்கள் சந்திப்பு: பண்ணாரி சோதனைச்சாவடியில் தீவிர வாகன தணிக்கை - narendra modi latest news

ஈரோடு: இருநாட்டுத் தலைவர்கள் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ள நிலையில், பண்ணாரி சோதனைச்சாவடியில் காவல் ஆய்வாளர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பண்ணாரி சோதனைச்சாவடியில் தீவிர வாகன தணிக்கை
author img

By

Published : Oct 11, 2019, 12:45 PM IST

சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். சீனா - இந்தியா இடையே நல்லுறவு வளர்க்க மாமல்லபுரத்தில், இரு நாட்டுத் தலைவர்கள் சந்தித்துப் பேசவுள்ளனர். சீன அதிபருக்கு திபெத் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், கர்நாடகத்திலிருந்து வரும் திபெத்தியர்கள் குறித்து, காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இரு மாநில எல்லையில் உள்ள உடையார்பாளையத்தில் திபெத்தியர்கள் அதிகளவில் உள்ளனர். இவர்கள் பண்ணாரி சோதனைச்சாவடி வழியாக வந்து, சீன அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக வந்த தகவலையடுத்து காவல் துறையினர் பண்ணாரி சோதனைச்சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

பண்ணாரி சோதனைச்சாவடியில் தீவிர வாகன தணிக்கை

வாகனங்களில் அனைத்து பகுதியில் சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர், ஓட்டுநர்களிடம் ஆதார், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை சரிபார்த்து அனுமதித்தனர். மேலும், தலைக்கவசம் அணிந்துவரும், இருசக்கர வாகன ஓட்டிகளின் முகம் ஆதாருடன் உள்ள புகைப்படத்துடன் ஒப்பிட்டும் தணிக்கையில் ஈடுபட்டனர்.

Intro:Body:tn_erd_01_sathy_police_checkpost_vis_tn10009

சத்தியமங்கலம்: பண்ணாரி சோதனைச்சாவடியில் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனை

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனைச்சாவடியில காவல் ஆய்வாளர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

சீனஅதிபர் ஜி ஜின் பிங் அரசு முறைப்பயணமாக இன்று இந்தியா வருகிறார். சீனா இந்தியா இடையே நல்லுறவு வளர்க்க மாமல்லபுரத்தில் இரு நாட்டுத்தலைவர் சந்தித்து பேச உள்ளனர். சீன அதிபருக்கு திபெத் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கர்நாடகத்தில் இருந்து வரும் திபெத்தியர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரு மாநில எல்லையில் உள்ல உடையார்பாளையத்தில் திபெத்தியர்கள் அதிகளவில் உள்ளனர். இவர்கள் பண்ணாரி சோதனைச்சாவடி வழியாக வந்து சீன அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் பண்ணாரி சோதனைச்சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

சீன அதிபர் வருகையை ஓட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக கர்நாடக எல்லையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக, கேரளா பதிவெண் கொண்ட கார், வேன் மற்றும் சுற்றுலா வாகனங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். வாகனங்களில் அனைத்து பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போலீசார் ஓட்டுநர்களிடம் ஆதார் மற்றும் ஓட்டுநர் உரிமம் சரிபார்த்து அனுமதித்தனர். மேலும் ஹெல்மெட் அணிந்து வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட்டை கழற்றி ஆதாருடன் உள்ள புகைப்படத்தை ஒப்பிட்டு தணிக்கையில் ஈடுபட்டனர். .
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.