கோவை காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். இவர் காந்திபுரம் 9ஆவது வீதியில் மடிக்கணினி விற்பனை கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை ஒரு மணி அளவில் சிவானந்தா காலனி பகுதியில் மது போதையில் தனது காரில் வேகமாக வந்த இவர் முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் மீதும் மோதிவிட்டு மேட்டுப்பாளையம் சாலையில் வேகமாக சென்றுவிட்டார். நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் ரத்தினபுரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் மீண்டும் சிவானந்தா காலனி வழியாக வந்த ஸ்டீஃபன் ராஜின் காரை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர். அப்போது அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்த ஸ்டீபன் ராஜ், அவர்களை தாக்கவும் முற்பட்டுள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ரத்தினபுரி காவல் துறையினர் ஸ்டீபன் ராஜை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அவர் போதையில் காரில் இருந்த லேப்டாப்பை எடுத்து கீழே போட்டு உடைத்துவிட்டு, கழுத்தில் இருந்த செயினையும் அறுத்து ரோட்டில் வீசி போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டார். தற்போது ஸ்டீபன் ராஜ் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:
'ட்ரம்பிற்கு இந்திய நாட்டின் வரலாறு தெரியாததால் மோடியை புகழ்ந்துள்ளார்' - கே.எஸ்.அழகிரி