பொள்ளாச்சி, பாலக்காடு சாலையில் தனியார் காயர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த 23 வயது இளைஞர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியுடன் பழகி உள்ளார். பின் நாளடைவில் இருவரும் காதலித்துப் பழகி வந்துள்ளனர்.
தொடர்ந்து சிறுமியை இளைஞர் திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இந்நிலையில், சிறுமி நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பொள்ளாச்சி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தமிழ்மணி உத்தரவின்பேரில் ஆய்வாளர் விஜயன் தலைமையில் எஸ்.ஐ.ராஜேஷ் கண்ணா மேற்கொண்ட விசாரணையில், சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்நிலையில், இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்து கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.