ETV Bharat / city

தவறான சிகிச்சையால் மாணவி உயிரிழப்பு; குடும்பத்தினர் முற்றுகைப் போராட்டம் - road rokko

கோவை: தவறான சிகிச்சையினால் மாணவி உயிரிழந்ததாகவும் மருத்துவரை கைது செய்யக்கோரியும் குடும்பத்தினர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தவறான சிகிச்சையால் மாணவி உயிரிழப்பு
author img

By

Published : Jun 18, 2019, 9:24 AM IST

கோவைப்புதூர் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யப்பிரியா(20). இவருக்கு வெகு நாட்களாக மாதவிடாய் பிரச்னை இருந்துள்ளது. சிகிச்சைகாக செல்வபுரம் பகுதியில் உள்ள சித்த வைத்தியர் சிவகுருநாதன் என்பவரிடம் சத்தியப்பிரியா கடந்த ஜனவரி மாதம் சென்றுள்ளார்.

சிகிச்சையின்போது அளிக்கப்பட்ட மருந்துகளால் மாணவியின் உடல்நிலை மோசமானதை அடுத்து அவர் கடந்த மாதத்தில் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில் சத்தியப்பிரியா குடும்பத்தினர் தவறான சிகிச்சை அளித்த சித்த வைத்தியரை கைது செய்யக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். காவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

தவறான சிகிச்சையால் மாணவி உயிரிழப்பு; குடும்பத்தினர் முற்றுகைப் போராட்டம்

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சத்தியப்பிரியா உயிரிழந்தார். இதனையடுத்து மாணவியின் உயிரிழப்புக்குக் காரணமான சித்த வைத்தியரை கைது செய்யக்கோரியும், புகார் அளித்து ஒரு மாதம் ஆகியும் வழக்குப் பதிவு செய்யாத செல்வபுரம் காவல்நிலைய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவரது உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Intro:தவறான சிகிச்சையால் மாணவி உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டம்

Body:கோவைப்புதூர் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் சத்யபிரியா இவருக்கு வெகு நாட்களாக மாதவிடாய் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது இதனையடுத்து செல்வபுரம் பகுதியில் உள்ள சித்த வைத்தியர் சிவகுருநாதன் என்பவருடன் கடந்த ஜனவரி முதல் சிகிச்சை பெற்று வந்துள்ளார் சிகிச்சையின் போது அளிக்கப்பட்ட மருந்துகளால் மாணவியின் உடல்நிலை மோசமானதை அடுத்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஒரு மாதமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி சத்யபிரியா இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதனையடுத்து மாணவியின் உயிரிழப்புக்கு காரணமான சித்த வைத்தியர் கைது செய்யக்கோரியும் புகார் அளித்து ஒரு மாதம் ஆகியும் வழக்கு பதிவு செய்யாத செல்வபுரம் காவல்நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது உறவினர் கோவை அரசு மருத்துவ மனை முன்பு சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டனர்.இது குறித்து பெற்றோர் கூறுகையில் மகளின் பிரச்சினைக்காக சித்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்றதாகவும் அவர் அளித்த தவறான சிகிச்சையால் தங்களது மகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சத்யபிரியா உயிரிழந்ததாகவும் மருத்துவரின் தவறான சிகிச்சை குறித்து செல்வபுரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை அவர் அளித்த தவறான சிகிச்சையே தங்களது மகள் உயிரிழப்புக்கு காரணம் என குற்றம் சாட்டினர் உடனடியாக சித்த மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாவிட்டால் தங்களது மகளின் உடலை வாங்கப் போவதில்லை என தெரிவித்தனர் இதனை அடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி சித்த மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.