ETV Bharat / city

விஜய தசமி வித்யாரம்பம்; கல்வியை தொடங்கிய குழந்தைகள்

author img

By

Published : Oct 15, 2021, 12:22 PM IST

Updated : Oct 15, 2021, 3:02 PM IST

விஜய தசமியை முன்னிட்டு, சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்று தங்களுடைய தொடக்கக் கல்வியை தொடங்கினர்.

vijayadasamy festivel  children started education

கோயம்புத்தூர்: நவராத்திரியின் நிறைவு நாளான இன்று (அக்.15) விஜய தசமி கொண்டாடப்படுகிறது. இந்தத் தினத்தில் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தால் குழந்தைகள் நன்றாக படிப்பார்கள் என்பது ஐதீகம்.

அதன்படி விஜயதசமியான இன்று வித்யாரம்பம் என்றழைக்கப்படும், குழந்தைகளுக்கான கல்வி கற்பிக்கும் பணி இன்று பல்வேறு கோயில்களில் நடந்தது.

விஜய தசமி வித்யாரம்பம் தொடக்கம்

இந்நிலையில், கோயம்புத்தூர் சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கு, குழந்தைகளின் பெயர்களை பெற்றோர் முன்பதிவு செய்து பச்சரிசி, வெற்றிலை உள்ளிட்ட பூஜை பொருள்களோடு பெற்றோர் குழந்தைகளோடு கோயிலுக்கு வந்து, வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதில் பச்சரிசியில் அ, ஆ என எழுத தொடங்கி குழந்தைகள் கல்வியை தொடங்கினர். கரோனா பரவலை கருத்தில் கொண்டு, பெற்றோர் மற்றும் குழந்தைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க:அனைத்துக் கோயில்களும் திறப்பு: மக்கள் மகிழ்ச்சி

Last Updated : Oct 15, 2021, 3:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.