ETV Bharat / city

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை 4 பேர் மீது வழக்குப்பதிவு

author img

By

Published : Oct 15, 2022, 5:31 PM IST

கோவையில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய சோதனையில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை 4 பேர் மீது வழக்குப்பதிவு.

கோயம்பத்தூர்: கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில் இருந்து குழந்தையை அழைத்துச் செல்ல, குழந்தையின் பெற்றோர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான சான்றிதழை வழங்க மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட பெற்றோர் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின் படி ரசாயனம் தடவிய நோட்டுகளை புகார்தாரிடம் கொடுத்து அனுப்பினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வைத்து குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் தனலட்சுமியிடம் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரையும் , அவருடன் லஞ்சம் வாங்க உறுதுணையாக இருந்த மற்றொரு ஊழியர் கார்த்திக் என்பவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.

இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கோவையை அடுத்த காக்காசாவடி கொச்சின் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து சோதனை சாவடி அலுவலகத்தில் அதிகமாக பணம் வசூலிப்பதாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

இதில், கணக்கில் வராத 33 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மோட்டார் வாகன ஆய்வாளர் ஈஸ்வரி, உதவியாளர் யுவராஜ் ஆகியோர் மீது வழக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நேற்றைய தினம் கோவையில் அரசு அலுவலங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு சோதனையில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யபட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கருணாநிதி உருவப்படத்திற்கு முன் மின் வாரிய ஊழியர் திமுக அரசை விமர்சனம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.