கோவை மாவட்டத்தின் எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான தொண்டாமுத்தூர், மருதமலை, பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் இடம் பெயருவதைப்போல காட்டுயானைகள் தற்போது பகல் நேரங்களிலும் உலா வருகிறன்றன.
இதனிடையே வெள்ளியங்கிரி மலைப்பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு தரிசனத்திற்காக பக்தர்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்துள்ளனர். இந்நிலையில் நேற்று (ஜூன்7) மாலை வெள்ளிங்கிரி மலைக்கு பக்தர்கள் காரில் சென்றுள்ளனர்.
அப்போது முதல் வளைவில் சென்றுகொண்டிருக்கும்போது, காட்டு யானைகள் சத்தம் கேட்டதால், சுதாரித்து கொண்ட கார் ஓட்டுனர் காரை நிறுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து அப்போது, திடீரென 2 ஆண் யானைகள் வந்து நின்றுள்ளன. பின், நீண்ட நேரத்திற்கு பிறகே சாலையின் நடுவே நின்ற யானைகள் காட்டிற்குள் சென்றன.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போளுவாம்பட்டி வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை குறித்து கண்காணித்தனர். மேலும் யானை ஊருக்குள் வராமல் இருக்க பட்டாசுகளை வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். பூண்டி சாலையில் இரண்டு காட்டு யானைகள் கம்பீரமாக நிற்கும் காட்சிகளை காரில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது அந்த காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.
இதையும் படிங்க: திடீரென தீப்பிடித்த பைக்... அதிருஷ்டவசமாக தப்பிய வாகன ஓட்டி!