கோயம்புத்தூர்: மக்களிடம் கருத்து கேட்டு தான் சட்டங்களை இயற்ற வேண்டும் என்றால் எந்த சட்டத்தையும் இயற்ற முடியாது என தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
பாஜக சார்பில் வேளாண் சீர்திருத்த மசோதா குறித்து கருத்து கேட்பு, விளக்க ஆலோசனைக் கூட்டம் கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலகம் எதிரிலுள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பாஜக துணைத் தலைவர் கனக சபாபதி, வானதி சீனிவாசன், பாஜக மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக துணைத் தலைவர் வானதி சீனிவாசன், "மக்களிடம் கருத்து கேட்டு தான் சட்டங்களை இயற்ற வேண்டும் என்றால், எந்த சட்டத்தையும் இயற்ற முடியாது. தேர்தெடுக்கப்பட்ட அரசு, மக்கள் கருத்தைக் கேட்காமலே சட்டத்தைக் இயற்றலாம். அதற்கு சட்டத்தில் உரிமை உண்டு.
பிரதமர் நரேந்திர மோடி, தொழில்துறைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைவிட விவசாயத்திற்கு மோடி முக்கியத்துவம் கொடுத்துள்ளார். மத்திய அரசு விவசாயிகள் எதிர்ப்புகள் தெரிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்தாது" என்றார்.
இதையும் படிங்க: நிலுவையில் 400-க்கும் மேற்பட்ட அரசியல் சாசன வழக்குகள்