கோவை: கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் வால்பாறையில், தொடர் மழை பெய்து வருகிறது. வால்பாறை செல்லும் வழியில் உள்ள கவர்கல் பகுதியில், பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால், அப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். குளிர்ப்பிரதேசமாக மாறியுள்ள அப்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
மரங்கள் காய்ந்துள்ளதால், மலைப்பாதையில் செல்லும்போது சுற்றுலாப் பயணிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் எனவும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது வாகனங்கள் முகப்பு விளக்குகளை பயன்படுத்த வேண்டும் எனவும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் மலைப்பாதையில் நடமாடும் வனவிலங்குகளை துன்புறுத்தாமல் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்றும் வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் முக்கிய அறிவிப்புகள்!