இந்தாண்டு இறுதிக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் தடுப்பூசி தட்டுப்பாடு, மக்களின் அச்சம், தயக்கம் உள்ளிட்ட காரணங்களால் தடுப்பூசி செலுத்தும் பணியில் சிக்கல் ஏற்பட்டுவருகிறது.
அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம் ராக்கிப்பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக 500க்கும் மேற்பட்டோர் கி.மீ. கணக்கில் வரிசையில் நின்று காத்திருந்தனர்.
ஆனால், சுகாதாரத்துறை அலுவலர்கள், இந்தப் பள்ளிக்கு 500 தடுப்பூசிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால், அனைவருக்கும் செலுத்த வாய்ப்பில்லை என்று கூறிவிட்டனர். இதனால் கி.மீ. கணக்கில் வரிசையில் நின்றும் தடுப்பூசி செலுத்தப்படாமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதையும் படிங்க: கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி: தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்திய சுகாதாரத் துறை அமைச்சர்!