ETV Bharat / city

தமிழ்நாட்டில் என்றும் இருமொழிக் கொள்கைதான் - பொள்ளாச்சி ஜெயராமன் - பொள்ளாச்சி ஜெயராமன்

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

jayaraman
jayaraman
author img

By

Published : Aug 11, 2020, 12:47 PM IST

பொள்ளாச்சி அருகே வடசித்தூரில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் 2021 சட்டப்பேரவை பொதுத்தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கும் வகையிலும் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், ”தற்போதுள்ள சூழலில் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு கேட்கும் நிலை இல்லாத காரணத்தால், தகவல் தொழில்நுட்பப் பிரிவு சிறப்பாக செயல்பட்டால், வரும் தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும்.

திமுகவில் உட்கட்சிப் பூசல், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சித்தாவல் போன்றவை அதிமுகவிற்கு சாதகமாக அமையும். எனவே, திமுக நிர்வாகிகள் பலர் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளது. ஆகவே, கட்சித் தொண்டர்கள் அனைவரும் சிறப்பாக தேர்தல் பணியாற்ற வேண்டும் ” என்று கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாட்டில் என்றும் இருமொழிக்கொள்கைதான் - பொள்ளாச்சி ஜெயராமன்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், “அதிமுக அரசு இருமொழிக்கொள்கையில் தான் எப்போதும் உறுதியாக இருக்கும்.

இந்தி இல்லாமல் இந்தியா இல்லை என்று கூறிய எஸ்.வி.சேகர் எவ்வளவு பெரிய தத்துவ ஞானி என்பது எங்களுக்கு தெரியாது, ஆனால் முதலமைச்சர் கூறியது போல் அவரது கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

இந்த நிகழ்வில், முன்னாள் அமைச்சர் தாமோதரன் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ’திமுகவில் இருந்து அதிமுகவிற்கு வருபவர்களை வரவேற்போம்’ - அமைச்சர் செல்லூர் ராஜு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.