கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் TTF வாசன். பைக்கரான இவர் தனது யூடியூப் சேனலில் பதிவிடும் வீடியோ காட்சிகளை பல லட்சம் இளைஞர் பட்டாளங்கள் கண்டு களித்து வருகின்றனர். சமீபத்தில் இவருடைய பிறந்தநாளில் இவரது பாலோவர் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடியதால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட சர்ச்சைகள் எழுந்தன.
மேலும் TTF வாசன் செய்த பைக் ஸ்டண்டுகள் குறித்து ஆதரவும் விமர்சனங்களும் எழுந்த நிலையில், அதிவேகமாக தனது பைக்கை ஓட்டியதாக வாசன் ஏற்கனவே வெளியிட்டு இருந்த வீடியோவை குறிப்பிட்டு ஏராளமானோர் இவரது செயலை கண்டித்தனர். மேலும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து சென்னை காவல்துறையினர் கண்காணிக்கப்படும் என தெரிவித்துள்ள நிலையில் TTF வாசன் தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் இளைஞர்களை தவறாக வழிநடத்துவதாக எழுந்த குற்றச்சாட்டு உண்மையல்ல.
247 கி.மீ வேகத்தில் வாகனத்தை ஓட்டியதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்கள், ஆனால் தமிழ்நாட்டில் அந்த வேகத்தில் ஓட்டவில்லை. வட இந்தியாவில் உள்ள சாலைகளில் பைக்கின் திறனை கண்டறிய தான் ஓட்டியதாக தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் தன்னை போன்றவர்களை மதிப்பதில்லை, வட இந்தியாவில் யூடியூபர்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: TTF வாசன் மீது குவிந்த புகார்களும்... காவல் துறையின் பதிலும்... நடவடிக்கை பாயுமா?