ETV Bharat / city

காண்டூர் கால்வாய்: வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்ட சிறுமியின் உடல் மீட்பு!

கோயமுத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள காண்டூர் கால்வாயில் சர்க்கார்பதி பழங்குடி இன மக்களின் குடிசைகள் அடித்து செல்லப்பட்ட சம்பவத்தில் காணாமல் போன சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது .

DEAD
author img

By

Published : Aug 14, 2019, 12:53 AM IST

Updated : Aug 14, 2019, 9:47 AM IST

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்குச் செல்லும் மலைப் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்க்கார்பதி மலையிலிருந்து பாறை ஒன்று உருண்டு காண்டூர் கால்வாயில் விழுந்ததில் அடைப்பு ஏற்பட்டது.

இதனால் கால்வாயிலிருந்து வெளியேறிய காட்டாற்று தண்ணீர் சர்க்கார்பதி பகுதியில் உள்ள நாகூர்ஊற்று பழங்குடி மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இங்கு 30க்கும் மேற்பட்ட பழங்குடி இன மக்கள் வசித்து வந்தனர். அவர்களது குடிசைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் அழகம்மாள் என்பவரின் இரண்டு வயது பெண் குழந்தை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

Little girl  சிறுமியின் உடல் மிட்பு  பொள்ளாச்சி  இரண்டு வயது குழந்தை  பழங்குடி இனம்
வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்ட சிறுமியின் படம்

இதைத் தொடர்ந்து, வனத்துறைக்கு தகவல் கொடுக்கபட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், தண்ணீரில் சிக்கித்தவித்த பழங்குடி இன மக்களை மீட்டனர். பின்னர் அவர்களை சர்க்கார்பதி மின்வாரிய குடியிருப்புப் பகுதியில் தங்க வைத்தனர். இதில் படுகாயம் அடைந்த ஆறு நபர்களுக்கு பொள்ளாச்சி, கோவை ஆகிய அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காண்டூர் கால்வாயில் சிறுமியின் உடல் மிட்பு

மேலும், தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட இரண்டு வயது குழந்தை அருகில் உள்ள பீடர் கால்வாயில் இருக்கலாம் என்ற நோக்கில் வனத்துறையினர் அங்கு தேடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஐந்து நாட்களாக வனத்துறையினர் இரவு பகலாக தேடிய நிலையில், காண்டூர் கால்வாயில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டு வேட்டைகாரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Intro:childBody:childConclusion:பொள்ளாச்சி அருகே உள்ள காண்டூர் கால்வாயில் பாறை விழுந்து அடைப்பு ஏற்பட்டு அதில் வெளியேறிய காட்டாற்று வெள்ளத்தில் சர்க்கார் பதிமழை வாழ் மக்கள் வசித்து வந்த 30க்கும் மேற்பட்ட குடிசைகளை அடித்து செல்லப்பட்ட சம்பவத்தில் காணமல் போன சிறுமியின் உடல் கண்டு எடுப்பு .

பொள்ளாச்சி -ஆகஸ்ட்- 13பொள்ளாச்சி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சிலநாட்களாக கன மழை கொட்டித் தீர்த்து இந்நிலையில் நேற்று காலை முதல் தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது, இதனால் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் மலை சாலைகளில் அங்கங்கே மண் சரிவு ஏற்பட்டதால் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் நேற்று இரவு சர்க்கார்பதி பகுதியில் பெய்த கனமழை காரணமாக மலையிலிருந்து பாறை ஒன்று உருண்டு வந்து காண்டூர் கால்வாயில் விழுந்து அடைப்பு ஏற்பட்டது,இதனால் அதிலிருந்து வெளியேறிய காட்டாற்று தண்ணீர் சர்க்கார்பதி பகுதியில் உள்ள நாகூர்ஊற்று மலைவாழ் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது, இதில் அதிர்ச்சியடைந்த மலைவாழ் மக்கள் அலறி அடித்து வெளியேறினர், இதில் 30க்கும் மேற்பட்ட மழை மக்கள் வசித்து வந்த குடிசைகள் அடித்துச் செல்லப்பட்டது, இதில் அழகம்மாள் என்பவரின் சுந்தரி என்ற 2 வயது பெண் குழந்தை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது, இதைத் தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து வந்த வனத்துறையினர் தண்ணீரில் சிக்கிய மலைவாழ் மக்களை மீட்டனர் சர்க்கர் பதி மின்வாரிய குடியிருப்பில் தங்க வைத்துள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த 6 பேர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இரவு நேரம் என்பதால் மின்சாரம் இல்லாத காரணத்தால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது, தொடர்ந்து காலை முதல் மீட்புப் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர், தண்ணீர் அடித்து செல்லப்பட்ட 2 வயது குழந்தை அருகில் உள்ள பீடர் கால்வாயில் இருக்கலாம் என்ற நோக்கில் வனத்துறையினர் அங்கு மீட்புப்பணியில் ஈடுபட்டு கடந்த ஜந்து நாட்களாக வனத்துறையினர், பொது பணித் துறையினர் என இரண்டு ஜே.சி.பி.மூன்று பெக்லைன் மூலம் இரவு பகலாக தேடி வந்தனர், இதையடுத்து இன்று மாலை காண்டூர் கால்வாய் யில் சிறுமியின் உடல் கண்டு எடுக்கப்பட்டு வேட்டைகாரன் அரசு மருத்துவமனையில் பிரத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
Last Updated : Aug 14, 2019, 9:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.