ETV Bharat / city

விளக்கு தேவை தான் அதை விட வீடு முக்கியங்களே - அதிகாரத்தை எட்டுமா பூர்வகுடிகளின் புலம்பல்

மழை காத்துக்குப் பறந்து போற வீட்டுல இருந்துக்கிட்டு அரசாங்கம் போட்டுத் தர்ற சோலார் விளக்க வச்சி மட்டும் என்ன பண்ணுறதுங்க என, வசிக்க நல்ல வீடில்லாத வேதனையைப் பதிவு செய்கிறார்கள் மலைவாழ் பூர்வகுடி மக்கள்.

trible_house
author img

By

Published : Oct 7, 2020, 10:50 PM IST

Updated : Oct 9, 2020, 3:34 PM IST

கோயம்புத்தூர் : உச்சி வெயிலையும் பக்குமாக தடுத்து அனுப்பி வைக்கும் ஓங்கி வளர்ந்த மரங்கள், தலை தடவும் தென்றல் என இயற்கை வஞ்சமில்லாமல் பாதுகாப்பு அளித்திருந்தாலும், சிதறிப் போன சோற்றுப் பருக்கைகளைப் போல, தள்ளித் தள்ளி இருக்கின்றன மலைவாழ் மக்களின் அந்த சின்னஞ்சிறிய வீடுகள்.

ஓலைகள், மரத்தடுப்புகளால் கட்டப்பட்ட வீடுகளுக்கு மத்தியில் ஒன்றிரண்டு வீடுகள் மட்டும் "ஆஸ்பெஸ்ட்டாஸ் சீட்" போர்த்திக் கொண்டு கொஞ்சம் பகுமானமாய் இருக்கின்றன. சோறு கேட்டவனுக்கு சோடா கொடுத்த கதையாக, குடியிருக்க நல்ல வீடு கேட்கும் மழைவாழ் பூர்வகுடி மக்களுக்கு, குடிசை வீடுகளில் சோலர் விளக்கு போட்டுக் கொடுத்திருக்கிறது அரசாங்கம்.

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, வால்பாறை வெள்ளி முடி, கவர் கல், நெடுங் குன்றா , கீழ் பூணாச்சி, டாப்சிலிப் உலாந்தி கோழிகமுத்தி, எருமப் பாறை, கூமாட்டி, சர்கார் பதி, சின்னார் பதி, நாகரூத்து, மானாம்பள்ளி சின்கோனா, சங்கரன் குடி, உடுமன் பாறை, பாலகினார், கல்லார்குடி, பரமன் கடவு என, 17 கிராமங்களில், 2 ஆயிரத்து 100க்கு அதிமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

மலையில் விளையும் இடு பொருள்கள் சேகரிப்பது, மஞ்சள், மலைத்தேன், குறுமிளகு, இலவம் பஞ்சு, சீமார் விற்பனை செய்து வரும் இம்மக்களில் சிலர் அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு கூலி வேலைக்குச் சென்று வருகின்றனர்.

விளக்கு தேவை தான் அதை விட வீடு முக்கியங்களே!

மலசர், மலைமலசர், இருளர், முதுவர், காடாஸ் என பல பிரிவுகளாக உள்ள இம்மக்களின் நீண்ட நாள் கோரிக்கை, கழிப்பறையுடன் கூடிய ஒரு வீடு, குடியிருக்கும் வீட்டிற்கு அனுபவப் பட்டா வழங்க வேண்டும் என்பதே.

கடந்த 1999இல் எங்களுக்கு அரசாங்கம் சோலார் லைட் போட்டுக் கொடுத்தாங்க. அது மழை வெள்ளத்துல அடிச்சிட்டு போயிடுச்சு. 15 வருஷங்கழிச்சு இப்போ மறுபடியும் சோலார் லைட் போட்டுத் தர்றதா சொல்லியிருக்காங்க அதிகாரிங்க, நல்லது தான். ஆனா நாங்க குடியிருக்க வீடு கட்டிக் கொடுத்தா நல்லா இருக்கும் என்கிறார் நாகரூத்து குடியிருப்பில் வசிக்கும் அய்யப்பன்.

கடந்தாண்டு பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஒரு சிறுமி அடித்துச் செல்லப்பட்டு, 15 நாட்கள் தேடலுக்குப் பின் மீட்கப்பட்டுள்ளார். மழைக்காலம் தொங்கியுள்ள நிலையில், வயதானவர்கள், குழந்தைகளை வைத்துக் கொண்டு இந்த குடிசை வீடுகளில் வசிப்பது சிரமம். அரசாங்கம் தங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் என இம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

trible_house
அடிப்படை தேவைக்காக குரல் கொடுக்கும் மலைவாழ் மக்கள்

மழைக் காலத்துல சோலார் லைட் அவசியம் தான் இருந்தாலும், வீடுகள் கட்டிக் கொடுத்த பிறகு சோலார் லைட் வச்சுத் தந்தா உபயோகமாக இருக்கும் என்கிறார் நாகரூத்து குடியிருப்பு வாசியான தீபா.

மலைவாழ் மக்களின் கோரிக்கைகள் குறித்து, ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் ஆரோக்கியா ராஜ்சேவியர் கூறுகையில், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மலைவாழ் மக்கள் 189 பேருக்கு அனுபவ பட்டா விரைவில் வழங்கப்பட உள்ளது. வனத்துறை மூலமாக மின்பகிர்மான கழகம் சோலார் லைட் அமைத்துள்ளது. குடியிருப்புகளை புனரமைக்க அரசுக்கு பரிந்துறை செய்யப்பட்டு விரைவில் அவை சரி செய்யப்படும் எனக் கூறினார்.

இந்த உலகம் உயிர்வாழத் தேவையான காடுகளை பராமரித்து பாதுகாக்கும் மழைவாழ் மக்களின் அடிப்படை தேவைக்கானக் குரல் அதிகாரத்திலிருப்பவர்களை எட்டுமா?

இதையும் படிங்க : காட்டு யானையை வனத்திற்குள் அனுப்பிய அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள்!

Last Updated : Oct 9, 2020, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.