ETV Bharat / city

நீட் தேர்வில் பழங்குடியின மாணவன் வெற்றி!

ஆத்துப் பொள்ளாச்சியைச் சேர்ந்த, பழங்குடியின மாணவன் கடந்தாண்டு தேர்வில் தோல்வியடைந்த நிலையில், இந்த ஆண்டு 'நீட்' தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

நீட் தேர்வில் பழங்குடியின மாணவன் வெற்றி
நீட் தேர்வில் பழங்குடியின மாணவன் வெற்றி
author img

By

Published : Nov 5, 2021, 9:42 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அடுத்த, ஆத்துப்பொள்ளாச்சியில் வசிக்கும் பழங்குடியின முதுவர் இனத்தைச் சேர்ந்த, மகாலட்சுமி என்பவரது மகன் ராதாகிருஷ்ணன்.

இவரது இரண்டு வயதில் தந்தை இறந்துள்ளார். இவரது தாய் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி செய்து வருகிறார்.

406 மதிப்பெண்கள் பெற்று வெற்றி

தாயும், மகனும் தொகுப்பு வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்தாண்டு 'நீட்' தேர்வு எழுதிய ராதாகிருஷ்ணன், தேர்வில் தோல்வியடைந்தார். இந்நிலையில், கடந்த மாதம் நடந்த மருத்துவப் படிப்பிற்கான 'நீட்' நுழைவு தேர்வில், 16 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

இதில், இரண்டாவது முறையாக பங்கேற்ற ராதாகிருஷ்ணன் தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு, கடந்த வாரம் வெளியான தேர்வு முடிவுகளில், 406 மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: குடித்துவிட்டு அடுத்தவரின் வீட்டில் புகுந்த அதிமுக முன்னாள் எம்.பி.,க்கு அடி, உதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.