ETV Bharat / city

மர்ம காய்ச்சல்; மருத்துவ வசதிக்கு ஏங்கும் மலைவாழ் மக்கள்

கோவை: வால்பாறை அருகே கீழ் பூனாச்சி பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளனர்.

TREBLE PEOPLE
author img

By

Published : Aug 2, 2019, 12:32 AM IST

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள வெள்ளி முடி, மாவுடப்பு, பூனாச்சி, கீழ் பூனாச்சி பகுதிகளில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். கீழ் பூனாச்சியில் மட்டும் 40 மலைவாழ் குடும்பங்கள் உள்ளன. இவர்கள், மலைகளில் விளையும் பயிர்கள், பழவகைகள், மலைத்தேன் சேகரிப்பு என தொழில் செய்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் கடந்த மூன்று மாதங்களாக காய்ச்சலால் சிரமப்படுவதாகவும், மருத்துவமனைக்கு செல்வதாக இருந்தால் ஒரு கிலோ மீட்டர் வரை வனப்பகுதியில் நடந்து செல்ல வேண்டும்.

TREBLE PEOPLE  HEALTH ISSUES
வாகன வசதி இல்லாத காரணத்தால் மருத்துவமனைக்கு செல்ல இயலவில்லை

அரசு பேருந்து வரும் நேரத்தில் தான் வரவேண்டும், தினம்தோறும் ஐந்து முறை மட்டும் பேருந்து வந்து செல்வதால் மருத்துவமனைக்குச் செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர். பழங்குடியினருக்கு என நடமாடும் மருத்துவ வாகனம் இருந்தும் அது வருவது இல்லை. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மர்ம காய்ச்சலால் பாதிப்படைந்து உள்ளனர்.

பழங்குடி இன மக்கள் மருத்துவ வசதி கேட்டு கோரிக்கை

முன்பெல்லாம் வாரம் ஒரு முறை மருத்துவர்கள் வருவார்கள். ஆனால் தற்போது மருத்துவர்கள் வராமல் செவிலியர்கள் வந்து சிகிச்சை அளிப்பதாகவும் முறையான சிகிச்சை அளிக்காமல் உள்ளதாகவும் தங்களுக்கு முழு உடற் பரிசோதனை செய்து முறையாக சிகிச்சை அளிக்க வேண்டும் என கீழ் பூனாட்சி பகுதி மக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Intro:trible issueBody:trible issueConclusion:வால்பாறை காடம்பாறையில் கீழ் பூனாச்சியில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் மருத்துவ வசதிக்கு ஏங்கும் மலைவாழ் மக்கள். வால்பாறை-1 வால்பாறை அடுத்துள்ள காடம்பாறையாகும் இங்குள்ள வெள்ளி முடி, மாவுடப்பு, பூனாச்சி, கீழ் பூனாச்சி பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்கள் தலைமுறை, தலைமுறையாய் வசித்து வருகின்றனர். கீழ் பூனாச்சியில் வசிக்கும் மக்கள் நாற்பது குடும்பங்களில் 150க்கும் மேற்ப்பட்டோர் உள்ளனர், இவர்களின் பிரதானமானது மலைகளில் விளையும் பயிர்கள், விவசாயம், பழவகைகள், மலைத்தேன் சேகரிப்பு என தொழில் செய்து வருகின்றனர் கடந்த மூன்று மாதங்களாக காய்ச்சல் வந்து சிரமபடுவதாகவும் தாங்கள் மருத்துவமனைக்கு செல்வதாக இருந்தால் ஒரு கிலோ மீட்டர் வனப்பகுதியில் நடந்து தான் செல்ல முடியும் மேலும் அரசு பஸ் வரும் நேரம் பார்த்தும் ஒரு நாளைக்கு ஐந்து முறைதான் பஸ் வந்து செல்வதால் மருத்துவமனை செல்ல சிரமபடுகின்றனர் போதிய வாகன வசதி இல்லதா காரணத்தினால் சிகிச்சை போக வால்பாறை அரசு மருத்துவமனைக்கும்இல்லையெனில் தனியார் எஸ்டேட் மருத்துவமனை செல்கின்றனர் பழங்குடி யினருக்கும் என நடமாடும் மருத்துவ வாகனம் இருந்தும் வருவது இல்லை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த மர்ம காய்ச்சலால் மிகவும் பாதிப்பு அடைந்து உள்ளனர். முன்பெல்லாம் வாரம் ஒரு முறையும் டாக்டர்கள் வருவார்கள் ஆனால் தற்போது டாக்டர்கள் வராமல் செவிலியர்கள் வந்து சிகிச்சை அளிப்பதகவும் முறையான சிகிச்சை அளிக்காமல் உள்ளதாகவும் தங்களுக்கு முழு உடற் பரிசோதனை செய்து முறையாக சிகிச்சை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர். பேட்டி- நாகம்மாள்( கீழ் பூனாச்சி, மலைவாழ் மக்கள்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.