ETV Bharat / city

அனைத்திந்திய ஜனநாய மாதர் சங்க மாநாட்டில் திருநங்கை தேர்வு! - பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள்

அனைத்திந்திய ஜனநாய மாதர் சங்க மாநாட்டில் கோவை மாவட்டக்குழுவில் மெலினா என்கிற திருநங்கை தேந்தெடுக்கப்பட்டுள்ளார்.

திருநங்கை மெலினா
திருநங்கை மெலினா
author img

By

Published : Jun 23, 2022, 12:42 PM IST

கோவை: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16 ஆவது கோவை மாவட்ட மாநாடு மேட்டுப்பாளையத்தில் நேற்று முன்தினம் (ஜூன்21) அதன் மாவட்ட தலைவர் வனஜா தலைமையில் நடைபெற்றது. மாநாட்டை தொடங்கி வைத்து மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா உரையாற்றினார். இம்மாநாட்டில், பல்வேறு விதமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக,

  • ரேசன் கடைகளில் பொருட்களை தரமானதாக வழங்க வேண்டும்.
  • அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் உள் விசாரணை கமிட்டியை உடனடியாக அமைக்க வேண்டும்.
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
  • ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ள துப்புரவு பணியாளர்கள் நிரந்தரமாக்கப்பட வேண்டும்.
  • கோவை மாநகராட்சி சூயஸ் என்னும் வெளிநாட்டு தனியார் நிறுவனத்துடனான குடிநீர் வினியோக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
  • காவல் நிலையங்களில் புகார் அளிக்கவரும் பெண்களை அலைக்கழிப்பு செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து சங்கத்தின் மாவட்ட தலைவராக சி.ஜோதிமணி, செயலாளராக டி.சுதா, பொருளாளராக உஷா மற்றும் துணை தலைவர்களாக ராஜலட்சுமி, தங்கமணி, சாமுண்டீஸ்வரி, அ.ராதிகா, ஆர்.வனஜா ஆகியோரும், துணை செயலாளர்களாக சாந்தா, மெகபு நிஷா, அமுதா, ரேவதி, ஜீவாமணி ஆகியோர் உட்பட 31 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.

முன்னதாக அனைத்திந்திய ஜனநாய மாதர் சங்க மாநாட்டில், கோவை மாவட்டக்குழுவில் மெலினா என்கிற திருநங்கை தேந்தெடுக்கப்பட்டுள்ளார். கரோனா காலகட்டத்தில் மாதர் சங்கத்தினர் வழங்கிய உதவிகளும் அனைவரையும் சமமாக பாவிக்கிற மாதர் சங்கத்தின் நடவடிக்கைகள் தன்னை ஈர்த்தது என்று தெரிவித்துள்ளார். மெலினா கவுண்டம்பாளையத்தில் மாதர் சங்கத்தின் கிளை செயலாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.