ETV Bharat / city

முட்டாளாக இல்லாமல் சிந்தித்து வாக்களியுங்கள் - கோவை சரளா!

கோவை: ஏப்ரல் 18ஆம் தேதியும் முட்டாளாக இருந்தால், அடுத்த ஐந்து ஆண்டுகள் முட்டாளாகத்தான் இருக்க வேண்டும் என காமெடி நடிகை கோவை சரளா பேசினார்.

ஏப்ரல் 18-ஆம் தேதி முட்டாளாக இருக்காமல் சிந்தித்து வாக்களியுங்கள் -கோவை சரளா!
author img

By

Published : Apr 13, 2019, 3:45 PM IST

கோவை மக்களவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து நடிகை கோவை சரளா பல்லடம் எம்ஜிஆர் ரோட்டில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தற்போதைய சூழலில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. இன்று பெண்கள் எங்கும் சுதந்திரமாக நடந்து செல்லும் நிலை இல்லை. எப்போது ஒரு பெண் கழுத்து நிறைய நகையுடன் இரவில் தனியாக நடந்து செல்கிறாளோ அப்போது தான் முழுமையாக சுதந்திரம் கிடைத்ததாக காந்தியடிகள் கூறியுள்ளார். ஆனால் அந்த சுதந்திரம் இன்று வரை கிடைக்கவில்லை என்று கூறினார்.

மேலும், வருடத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதி தான் முட்டாள்கள் தினம். ஆனால் ஏப்ரல் 18ஆம் தேதியும் நாம் முட்டாளாக இருந்தால், அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளும் முட்டாளாகத்தான் இருக்கவேண்டும். எனவே, பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார்.

கோவை பாராளுமன்ற மக்கள் நீதி மையம் வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து நடிகை கோவை சரளா பல்லடம் எம்ஜிஆர் ரோட்டில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தமிழகத்தில் தற்போதைய சூழலில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. இன்று பெண்கள் எங்கும் சுதந்திரமாக நடந்து செல்லும் நிலை இல்லை. எப்போது ஒரு பெண் கழுத்து நிறைய நகையுடன் இரவில் தனியாக நடந்து செல்கிறாளோ அப்போது தான் முழுமையாக சுதந்திரம் கிடைத்ததாக காந்தியடிகள் கூறியுள்ளார். ஆனால் அந்த சுதந்திரம் இன்று வரை கிடைக்கவில்லை. பெண்கள் வாக்கிங் போனால் பயம் பைக்கில் செல்பவர்கள் அட்ரஸ் கேட்டாலும், ஜவுளி கடைக்கு சென்றால் பயம் அங்கு ட்ரெஸ் மாத்தி பாக்க வேண்டும் என்றாலும் பயம்,  ஏன் கருவில் இருக்கும் குழந்தை பெண் என தெரிந்தாலும் அந்த குழந்தைக்கும் பயம் இப்படி எல்லா சூழ்நிலையிலும் பெண்கள் பயந்து கொண்டுதான் வாழ்ந்து வருகிறார்கள்.
அதுமட்டுமல்ல அப்பா என்று சொன்னால் அசிங்கமா பார்க்கிறார்கள் சகோதரனிடம் சகஜமாகப் பழகினாள் சங்கடப்படுத்துகிறார்கள், மாமா என்று கூப்பிட்டால் மடக்கப் பார்க்கிறார்கள்,  உறவு என்று சொன்னால் உறவாட பார்க்கிறார்கள்,  இப்படி பெண்களுக்கு எந்தப் பக்கம் பார்த்தாலும் கொடுமையாக உள்ளது இதற்கு ஒரு முடிவு வர வேண்டும். எனவே மக்கள் நீதி மையம் சார்பாக உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நாட்டில் நல்லாட்சி நடக்க வேண்டும் லஞ்சம் இல்லாத அராஜகம் இல்லாத ஒரு நல்ல ஆட்சி நடக்க மாற்றத்தை நீங்கள் தான் கொண்டுவர வேண்டும்.  மக்கள் நீதி மையம் பெண்களுக்கான பல திட்டங்களை அறிவித்துள்ளது. அது மட்டுமின்றி பெண்களின் பாதுகாப்புக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. நாம் எப்பொழுது பார்த்தாலும் திமுக அதிமுக என இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே மாறி மாறி வாக்களித்து வருகிறோம், இந்த முறை பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்றால் மாற்றத்தைக் கொண்டு வந்து மக்கள் நீதி மையத்திற்கு வாக்களிக்க வேண்டும். உங்களது சின்னம் டார்ச் லைட் சின்னம்.
வருடத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதி தான் முட்டாள்கள் தினம் ஆனால் ஏப்ரல் 18-ஆம் தேதியும் நாம் முட்டாளாக இருந்தால் அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளும் முட்டாளாகத்தான் இருக்கவேண்டும் எனவே பொதுமக்கள் சிந்தித்து வாக்களித்து மக்கள் நீதி மைய வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.