கரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழ்நாடு அரசு முடிவு
கரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசி கொள்முதல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி தட்டுப்பாட்டை தடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
'காலில் விழுந்து கண்ணீர் விட்ட இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர்!'
இஎஸ்ஐ அரசு மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன், செவிலியர் காலில் விழுந்து வணங்கி கண்ணீர் விட்ட சம்பவம், அனைவரின் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அறிகுறியற்ற கரோனா தொற்று: ஐந்தே நாட்களில் 790 பேர் மரணம்!
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஐந்தே நாட்களில் அறிகுறியற்ற கரோனா தொற்று கொண்டிருந்தவர்கள் 790 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
சென்னை: 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
’சொமாட்டோ ஊழியர்களுக்கு தடுப்பூசி’ - நிறுவனர் தகவல்
சொமாட்டோ ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் தீபிந்தர் கோயல் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தியா வரும் 5,805 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன்!
ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்க ஐந்து நாடுகளில் இருந்து 5,805 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் இறக்குமதி செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் மேலும் 3.48 லட்சம் பேருக்கு கரோனா: 4,205 பேர் பலி
நேற்று மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்ட நான்காயிரத்து 205 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை இரண்டு லட்சத்து 54 ஆயிரத்து 197ஆக அதிகரித்துள்ளது.
கரோனா நிவாரணம்: தனியார் மருத்துவமனைக்கு உதவிய பிரபாஸ் படக்குழு
50 படுக்கைகள், பிபிஇ உடை, மருத்துவ சாதனங்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் என பல்வேறு உபகரணங்கள் இதில் பயன்படுத்தப்பட்டன. இவை அனைத்தையும் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு படக்குழு அளித்துள்ளது.
'அண்ணாத்த' படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் நடந்த 'அண்ணாத்த' படப்பிடிப்பை முடித்து விட்டு இன்று தனி விமானம் மூலம் சென்னைக்குத் திரும்பியுள்ளார்.
’பெருந்தொற்று சமயத்தில் இந்தியாவிற்கு அமெரிக்கா துணையாக இருக்கும்!’
கரோனா காலத்தில் இந்தியாவுக்கு 7,500 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை அமெரிக்க அரசும் அந்நாட்டின் தனியார் நிறுவனங்களும் இணைந்து வழங்கி உதவியுள்ளன.