ETV Bharat / city

உலக புலிகள் தினம் - பொள்ளாச்சி அருகே விழிப்புணர்வு பேரணி

உலக புலிகள் தினத்தையொட்டி பொள்ளாச்சி அருகே விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

உலக புலிகள் தினம்
உலக புலிகள் தினம்
author img

By

Published : Jul 29, 2022, 8:52 PM IST

கோயம்புத்தூர்: உலக புலிகள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் ராமசுப்பிரமணியம் உத்தரவின்படி, பொள்ளாச்சி துணை இயக்குநர் கணேசன் தலைமையில் புலிகளைப் பாதுகாப்பதன் அவசியம் மற்றும் வனப்பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து ஆனைமலை அடுத்த நா. மூ. சுங்கத்தில் தொடங்கி ஆழியார் வரை பேரணி நடைபெற்றது.

இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற பேரணியில் கோவை தனியார் கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் உதவி வன பாதுகாவலர் செல்வம், வனச்சரகர்கள் மணிகண்டன், வெங்கடேஷ் மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டனர்.

உலக புலிகள் தினம்

இதில் கலந்துகொண்ட மாணவ, மாணவியர்கள் புலி வேஷமிட்டு பேரணியில் பங்கேற்றனர். வனத்துறையினர் தங்களது முகத்தில் புலியின் தோற்றம் பொருந்திய ஓவியத்தை வரைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதை அடுத்து அட்டகட்டியில் உள்ள பயிற்சி முகாமில் புலிகள் வாழ்வியல் குறித்து கண்காட்சி இடம் பெற்றது.

இதையும் படிங்க: சிகரெட் பாக்கெட்டில் இனி புதிய 'அபாய' புகைப்படம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.