கோயம்புத்தூர்: லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் கொள்ளையடித்தவர்களை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவை ஜி என் மில்ஸ் அடுத்த உருமாண்டம்பாளையம் ராகவேந்திரா காலனியில் லாட்டரி அதிபர் மார்ட்டின் சகோதரர் வேதமுத்து என்பவர் மனைவி செபஸ்தியுடன் வசித்து வருகிறார்.
இத்தருணத்தில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் வீட்டின் மதில்சுவரை தாண்டி குதித்த 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல், வீட்டின் முன்புற கதவை இரும்பு கம்பியால் உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வேலைக்கார பெண் அருள்மேரி, வேதமுத்து, செபஸ்தி ஆகியோரை கட்டிப்போட்டு அலமாரியைத் திறந்துள்ளனர்.
புதுக்கோட்டையில் 13 வயது சிறுமி உயிரிழப்பு! பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார்?
பின்னர், அதிலிருந்த 30 சவரன் தங்க நகை, 45 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்களாகவே ஒருவருக்கொருவர் கைகளை அவிழ்த்து, துடியலூர் காவல் துறையினருக்கு கொள்ளைச் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துடியலூர் காவல்துறையினரும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமாரும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு படக்கருவியின் காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிறந்தநாள் பரிசாக முத்தம் கொடுத்த செயல் அலுவலர் - பணியிடை நீக்கம்!
கொள்ளையர்களில் நான்கு பேர் இந்தியில் பேசியுள்ளதால், வட மாநிலத்தவரின் கைவரிசையா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.