ETV Bharat / city

'மக்கள் கிராம சபைக் கூட்டத்திற்கு அதிமுகவினரை திட்டமிட்டு அனுப்பவில்லை' - எஸ்.பி. வேலுமணி - minister sp velumani

திமுக நடத்திய மக்கள் கிராம சபைக் கூட்டத்திற்கு அதிமுகவினரை திட்டமிட்டு அனுப்பவில்லை என மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மறுப்பு தெரிவித்துள்ளார்

dmk kirama sabai kootam
'கிராம மக்கள் சபை கூட்டத்திற்கு அதிமுகவினரை திட்டுமிட்டு அனுப்பவில்லை' - எஸ்.பி. வேலுமணி
author img

By

Published : Jan 3, 2021, 6:56 AM IST

கோவை: கோவை தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட தேவராயபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்ட மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பெண் ஒருவர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினார். அவரை, அதிமுகவினர் திட்டமிட்டு அனுப்பியதாக மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டினர். ஸ்டாலினை நோக்கி கேள்வி எழுப்பிய ஒரு பெண் உள்பட ஐந்து பேர் கூட்டத்தில் திமுகவினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தாக்கப்பட்ட ஐந்து பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "2ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருமாள் கோயிலை மறித்து திமுகவினர் மேடை அமைத்துள்ளனர். கோயிலுக்குச் சென்றவர்கள் கிராம சபைக் கூட்டம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதில் சொல்ல முடியாமல் கேள்வி கேட்டவர்களை குண்டர்களை வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

'கிராம மக்கள் சபை கூட்டத்திற்கு அதிமுகவினரை திட்டுமிட்டு அனுப்பவில்லை' - எஸ்.பி. வேலுமணி

எதிர்க்கட்சியாக இருக்கும்போதே இவ்வாறு நடந்துகொள்ளும் திமுகவினர், ஆட்சிக்கு வந்தால் இதுபோன்றுதான் நடக்கும். இந்தத் தாக்குதலுக்கு ஸ்டாலின் நிச்சயம் பதில் சொல்ல வேண்டும். ஸ்டாலின் பதவி வெறிபிடித்து அலைகிறார். இன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு அதிமுகவினரை திட்டமிட்டு அனுப்பவில்லை.

மு.க.ஸ்டாலின் கூறுவதுபோல் இன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு அதிமுகவினரை திட்டமிட்டு அனுப்பவில்லை. அப்படியான கீழ்த்தரமான எண்ணம் எங்களுக்கு கிடையாது. கூட்டத்திற்கு சென்றவர்கள் என்னிடம் சொல்லிவிட்டு செல்லவில்லை. திமுகவினர் நடத்திய தாக்குதலுக்கு தக்க பாடம் புகட்டுவோம்" என்றார்.

இதையும் படிங்க: 'என்னை மிரட்டாதீர்கள்?' - ஸ்டாலினை நோக்கி கேள்விக் கணைகளைத் தொடுத்த பெண்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.