கோயம்புத்தூர்: கோவை பாரதியார் பல்கலைக்கழக 37ஆவது பட்டமளிப்பு விழா இன்று (மே 13) நடைபெற்றது.
தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் 40 இருக்கைகள் பத்திரிகையாளர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. செய்தி தொடர்பான தகவல் அடங்கிய பைல்கள் செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதில் தகவல்கள் அடங்கிய பேப்பர்களுடன் , பதிவாளரின் பெயர் கொண்ட கவரில் பணம் வைத்து வழங்கப்பட்டது. அனைத்து இருக்கைகளிலும் செய்தியாளர்களுக்கு இந்த பைல் வழங்கப்பட்ட நிலையில், அதில் பணம் பணம் வைத்து வழங்கப்பட்டதற்குப் பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் பிற்பகல் பட்டமளிப்பு விழா நிறைவடைந்த நிலையில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பத்திரிகையாளர்களுக்கு லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டது குறித்து முறையிட்டனர். இந்த விவகாரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும்; இது குறித்து விசாரித்து தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பெட்ரோல் allowance-க்காக பணம்: பெட்ரோல் அலவன்ஸாக கொடுத்து இருப்பார்கள் எனத் துணைவேந்தர் காளிராஜ் கூறியதற்குப் பத்திரிகையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், தன்னுடன் இருந்த பாதுகாவலரிடம் பணத்தைக் கொடுத்து விடும்படியும், இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுத்த பின் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைத் தெரிவிப்பதாகவும் துணைவேந்தர் காளிராஜ் தெரிவித்தார்.
இதனையடுத்து பத்திரிகையாளர்கள் பணத்துடன் கொடுத்த கவரை திருப்பி ஒப்படைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
இதையும் படிங்க:இந்தி பேசுபவர்கள் பானிபூரி விற்கிறார்கள்- ஆளுநரை வைத்துக்கொண்டே பேசிய பொன்முடி