கோவை மாவட்டம் சூலூர் தொகுதியின் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்தவர் கனகராஜ் (64).
அதிமுகவின் மிக நீண்ட கால உறுப்பினரான இவர், கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு நிரம்பிய அரசியல் பிரமுகராகவும் வலம் வந்துகொண்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தபோது இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.
இவரின் இறப்பு அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் கனகராஜ் சுமார் 36 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர்.