கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே கொள்ளுபாளையம் காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து சிலர் விற்பனை செய்வதாக தாலுக்கா காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, துணை ஆய்வாளர் ரமேஷ் கண்ணா தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனை செய்தனர்.
மதுபாட்டில்கள் பறிமுதல்
அப்போது அங்கு, பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 62 ஆயிரத்து 800 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 650 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் நடந்த பகுதி, கோமங்கலம் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்டதாகும்.
இடமாற்றம்
இது தொடர்பாக முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காத கோமங்கலம் காவல் நிலைய துணை ஆய்வாளர் மணிமாறனை, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு ஆயுதப்படைக்கு மாற்றி நேற்று (டிச.16) மாலை உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: காவல் துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் - சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால்