கோவையில் உள்ள தனியார் பள்ளி (மணீஸ் பள்ளி) மாணவ மாணவியினர் கரோனா விழிப்புணர்வு ஓவியங்கள், கவிதைகள், கட்டுரைகளை எழுதி கோவை அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளனர்.
இந்த ஓவியங்கள் கோவை அரசு மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நிர்மலாவிடம் அப்பள்ளியின் ஆசிரியர்கள் இணைந்து வழங்கினர்.
பள்ளி மாணவ மாணவிகள் வரைந்த ஓவியங்கள், கவிதைகள் சிறு வயதிலேயே குழந்தைகள் அழகான விழிப்புணர்வு ஓவியங்கள், கவிதை, கட்டுரைகளை தீட்டியிருப்பது மகிழ்ச்சியை அளிப்பதாகவும், இதனை அளித்த குழந்தைகளுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் மருத்துவமனை முதல்வர் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.
பள்ளி மாணவ மாணவிகள் வரைந்த ஓவியங்கள், கவிதைகள் குழந்தைகள் வரைந்த ஓவியத்தில், மருத்துவர்கள் உலகை காப்பது போன்றும், "எங்கள் மருத்துவ தோழர்களின் உழைப்பில் நீ (கரோனா) மாய்வது உறுதி, கரோனா அழிக்க மருந்தில்லையென மமதையில் திரியாதே" என்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.