ETV Bharat / city

’கை, கால் நகங்கள் நீல நிறமாக இருந்தன’ - அங்கோடா லொக்காவின் உடற்கூறாய்வு அறிக்கை! - இலங்கை தாதா அங்கோடா லொக்கா

கோவையில் கடந்த மாதம் உயிரிழந்த இலங்கை தாதா அங்கோடா லொக்காவின் உடற்கூறாய்வு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

Sri lankan gangster Angoda Lokka
Sri lankan gangster Angoda Lokka
author img

By

Published : Aug 9, 2020, 9:29 AM IST

Updated : Aug 9, 2020, 10:35 AM IST

இலங்கையைச் சேர்ந்த தாதா அங்கோடா லொக்கா பிரதீப் சிங் என்ற பெயரில் கோவையில் வசித்துவந்தார். இவர் கடந்த மாதம் ஜூலை 3ஆம் தேதி இரவு கோவையில் சேரன் மாநகர் பகுதியில் உயிரிழந்தது தொடர்பாக பீளமேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டர். அதைத்தொடர்ந்து அவரது உடல் உடற்கூறாய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவனை தடயவியல் மருத்துவர்களால் ஜூலை 5ஆம் தேதி அங்கோடா லெக்காவின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. பின்னர், அவரது உடல் மதுரையில் எரியூட்டப்பட்டுள்ளது.

Sri lankan gangster Angoda Lokka
இலங்கை தாதா அங்கோடா லொக்காவின் உடற்கூறாய்வு அறிக்கை

இந்நிலையில், அங்கோடா லொக்காவின் உடற்கூறாய்வு குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அங்கோடா லொக்காவின் கை மற்றும் கால் நகங்கள் நீல நிறமாக இருந்ததாகவும், உடலில் வெளி மற்றும் உள்காயங்கள் ஏற்பட்டதற்கான எந்த தடயமும் இல்லை என்றும் உடற்கூறாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கோடா லொக்கா விஷம் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டரா என்ற கோணத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் வழக்கை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அங்கோடா லொக்கா யார்? மரணத்தில் இருக்கும் சந்தேகம் என்ன? வழக்கின் போக்கு...

Last Updated : Aug 9, 2020, 10:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.