கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையம் ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு சின்னராஜ் ,குமார் என்ற இரு மகன்கள் உள்ளனர். குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்ற நிலையில், குமார் தன் தந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், தன் தந்தையிடம் குமார் மது அருந்த பணம் கேட்டுள்ளார். ஆனால், குமாரின் தந்தை பணம் தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், குமார் சுத்தியலால் தன் தந்தையை தாக்கியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவம் நடந்த வீட்டிலிருந்து காலை புகை வந்துள்ளதை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர். அவர்கள் விட்டில் அருகே சென்று பார்த்த போது, ராமசாமி கொலை செய்யப்பட்டுள்ளதை அறிந்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
காவலர்கள் விசாரணை மேற்கொண்டதில், கொலை செய்ததை ஒப்புக்கொண்டதுடன், வீடு தீப்பிடித்ததைப் போன்று ஏற்பாடு செய்து கொலையை மறைக்க முயற்சி செய்ததாக குமார் தெரிவித்துள்ளார். அவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மாரிதாஸை விசாரிக்கும் சைபர் கிரைம் காவல் துறை