ETV Bharat / city

'பல குடிசைகளுக்கு நடுவே சில கான்கிரீட் வீடுகள்' - சமூக ஆர்வலரின் முயற்சி

author img

By

Published : Oct 12, 2020, 6:31 PM IST

'குடியிருக்க ஒரு வீடு' என்பதுதான் பொருளாதாரத்தில் பின்தங்கிய பலரின் ஆசை. மலை சூழ்ந்த பகுதிகளில் வாழும் பழங்குடியினருக்கோ அது தான் கனவு. கனவு பெரும்பான்மையினருக்கு எப்போதும் கைகூடுவதில்லை; ஆனால் எங்களுக்கு கைகூடியிருக்கிறது என்று பெரு மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர் கோவை மாவட்டம், கண்டிவழி கிராம மக்களில் சிலர்.

'பல குடிசைகளுக்கு நடுவே சில கான்கிரீட் வீடுகள்'  - சமூக ஆர்வலரின் முயற்சி
'பல குடிசைகளுக்கு நடுவே சில கான்கிரீட் வீடுகள்' - சமூக ஆர்வலரின் முயற்சி

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே உள்ளது கண்டிவழி கிராமம். மலைப்பகுதிக்கு அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் குடிநீர் தொட்டி கட்டடத்தை தவிர மற்ற கட்டங்களெல்லாம் குறுகலாகவும் சிதிலமடைந்தும் காணப்படுகிறது. இங்கு வாழும் பழங்குடியின மக்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 20 தொகுப்பு வீடுகளை கட்டிக் கொடுத்தார். காலப்போக்கில் அந்த வீடுகள் குடியிருக்க முடியாத அளவுக்கு சென்ற நிலையிலும் வெயில், மழை என எல்லா சூழலிலும் இந்த வீட்டிலேயே இவர்கள் வசித்து வந்தனர்.

இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும் அரசுக்கும் தெரிவித்தும் எந்த ஒரு பலனும் இவர்களுக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் சமூக ஆர்வலர் ஜோஸ்வா என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இக்கிராமத்திற்கு சென்றபோது மக்களின் அவலநிலையை கண்டு மாவட்ட நிர்வாகத்திடம் தெரியப்படுத்தியுள்ளார். மேலும் அரசு அலுவலர்களை தொடர்பு கொண்டு தமிழ்நாடு அரசின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். அதன் பலனாக முதல் கட்டமாக 5 தொகுப்பு வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது எனினும் தொகுப்பு வீடுகள் கட்ட முன் பணம் இருந்தால் மட்டுமே வீட்டு வேலைகள் ஆரம்பிக்க முடியும்.

இந்த சூழலில் நாதியற்று கிடந்தவர்களுக்கு 'நான் இருக்கிறேன்' என்று உறுதியளித்தார் ஜோஸ்வா. தனது நண்பர்கள் மூலம் நிதி திரட்டி முன்பணம் கொடுத்து கட்டடப் பணிகளை துவக்கி வைத்தார். அதே சமயம் அரசு சார்பில் 1.80 லட்சம் ரூபாய் மட்டுமே தொகுப்பு வீடுகளுக்கு வழங்கப்பட்ட நிலையில், அது செங்கல், மணல் வாங்குவதற்கு மட்டுமே போதுமனதாக இருந்தது. அப்போதும் கூடுதலாக இரண்டு லட்சம் ரூபாய் சேர்த்து நான்கு லட்சம் ரூபாய்க்கு ஒரு வீட்டை கட்டுவது என முடிவு செய்து 5 வீடுகளுக்கும் ஆகக்கூடிய செலவுகளை ஜோஸ்வா நண்பர்கள் உதவியுடன் ஏற்றுக்கொண்டு வீடுகளை கட்டி முடித்துள்ளார்.

இதுகுறித்து இவர் கூறுகையில், "தற்செயலாக கிராமத்துக்கு வந்த நிலையில் அவர்களின் நிலை எனக்கு தெரியவந்தது. இதனையடுத்து அரசு அலுவலர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித்தர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. கூலி வேலைக்கு செல்லும் பழங்குடியின மக்கள் முன்பணம் கொடுத்து வீடு கட்டுவது என்ற சிரமமான சூழலில் தனது நண்பர்கள் உதவியுடன் இந்த வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கண்டிவழி கிராமம்
கண்டிவழி கிராமம்

பழுதடைந்த வீட்டில் மழை, வெயில் என பல்வேறு சிரமங்களுக்கு இடையே குடும்பம் நடத்தி வந்த பழங்குடியின பெண் சிந்து தற்போது கான்கிரீட் வீட்டிற்குள் குடி புகுந்துள்ளார். அவர் கூறுகையில், "கடந்த சில வருடங்களாக பழைய வீடுகளில் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டப்போது, மழைகாலங்களில் அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் தங்கியிருந்தோம்; குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் அதே வீட்டில் மிகுந்த சிரமங்களுக்கு இடையே தங்கியிருந்தோம்; எங்களின் நிலை குறித்து அரசு அலுவர்களுக்கு சொன்னபோதிலும் புதிய வீடு என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. தற்செயலாக இங்கு வந்த ஜோஸ்வா எங்களின் நிலை குறித்து தெரிவித்து தொகுப்பு வீடுகள் கட்ட அனுமதி வாங்கியதுடன் பண உதவியும் செய்து கொடுத்துள்ளர். சினிமாக்களில் மட்டுமே பார்த்து ஏங்கிய கான்கிரீட் வீடு கிடைத்துள்ளது" என்று தெரிவித்தார்.

புதிதாக கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள்
புதிதாக கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள்

சிதிலமடைந்த வீடுகளிலேயே வாழ்நாள் முழுவதும் கழிந்து விடுமோ என்று வருத்ததில் வாழ்வை நகர்த்தியவர்கள் முகத்தில் தற்போது மகிழ்ச்சி ஒளி வீசுகிறது. அடித்தட்டு மக்களுக்கு, ஜோஸ்வா போன்ற சமூக ஆர்வலர்களின் அர்ப்பணிப்பு அகமும், புறமும் மலர வாழ்த்துகள்...

இதையும் படிங்க: 'டாக்டராவதுதான் என் லட்சியம்' - நெகிழ வைக்கும் 'ஏ பிளஸ் கிரேடு' பெற்ற பழங்குடியின மாணவி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.