ETV Bharat / city

கோயிலுக்குள் புகுந்த மலைப்பாம்பு; பக்தர்கள் பீதி! - kovai maruthamalai temple

கோவை: மருதமலை பாம்பாட்டி சித்தர் குகை அருகே பூனையை விழுங்க முயன்ற மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினர் காட்டுக்குள் விட்டனர்.

snake caught in temple
author img

By

Published : Jun 25, 2019, 8:28 AM IST

கோவை மாவட்டம் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குள் திடீரென்று மலைப்பாம்பு ஒன்று புகுந்து அங்கு இருந்த பூனையை விழுங்க அதனைச் சுற்றிவளைத்தது, இதனை பார்த்து அங்கிருந்த பக்தர்கள் பயத்தில் கூச்சலிட்டுள்ளனர். மலைபாம்போ துளிக்கூட அங்கிருந்து நகராமல் பூனையை இறுக்கிக் கொண்டது.

அதன் பின் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு விரைந்த அவர்கள் பாம்பை மீட்டு மேற்கு தொடர்ச்சி மலைவனப்பகுதியில் விட்டனர். பாம்பு பிடிபடும் காட்சியை அங்கிருந்தவர்கள் பலர் தங்களுடைய செல்போனில் வீடியோ எடுத்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான இங்கு அவ்வப்போது வனவிலங்குகள் ஊருக்குள் புகுவது வாடிக்கையாக உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

கோயிலுக்குள் புகுந்த மலைப்பாம்பு

Intro:மருதமலை பாம்பாட்டி சித்தர் குகை அருகே பூனையை விழுங்க தயாரான மலைப்பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விட்டனர்...Body:கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் சிறுத்தைகள் கரடிகள் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான இங்கு அவ்வப்போது வனவிலங்குகள் ஊருக்குள் புகுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் உள்ள பாம்பாட்டி சித்தர் குகை அருகே இன்று மாலை பூனையை இறையாக்கிக்கொள்ள மலைப்பாம்பு ஒன்று அதனை சுற்றி வளைத்தது. இதனைப் பார்த்த பக்தர்கள் கோவை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பாம்பை மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில் அனைவரும் சாமி தரிசனத்துக்காக பாம்பாட்டி சித்தர் குகைக்கு வந்து கொண்டிருந்தபோது மலைப்பாம்பு ஒன்று பூனையை விழுங்க தயாராக இருந்தது இதனை பார்த்து அனைவரும் கூச்சலிட்டும் அந்த பாம்பு அங்கிருந்து நகராமல் பூனையை இறுக்கிக் கொல்ல முயன்று கொண்டிருந்தது, இதனை அடுத்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் பாம்பிடமிருந்து பூனையை மீட்டனர் எனினும் அந்த பூனை பாம்பின் பிடியிலிருந்து விடுவிக்கும் முன்னர் பூனை உயிரிழந்தது என தெரிவித்தனர். மலைப் பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் வந்தாலும் மலைப்பாம்பு ஒரு பூனையை உணவாக்கிக்கொள்ள முயன்றதை பார்ப்பது அதிசயமான ஒன்று என பக்தர்கள் தெரிவித்தனர்.இதனை அங்கிருந்தவர்கள் பலர் தங்களுடைய செல்போனில் வீடியோவாக எடுத்தனர்.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.