கோயம்புத்தூர் வெள்ளக்கிணறு பகுதியில் இரு இளைஞர்களை வழிமறித்து 11 பேர் கொண்ட கும்பல் கடந்த 12ஆம் தேதி அரிவாளால் தாக்கியது.
காயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதன் சிசிடிவி காட்சியைக் கொண்டு துடியலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
இந்நிலையில் அதில் சம்பந்தப்பட்ட கண்ணன், சங்கீத், கோபிநாத், அஜய், பிரகாஷ், தினேஷ் ஆகிய ஆறு பேரை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள ஐந்து பேரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.