கோயம்புத்தூர்: மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பன்னிமடை, தடாகம், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவற்றில் சில யானைகள் உணவு தேடி அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகள், விளை நிலங்களில் புகுவது தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் நேற்றிரவு (டிசம்பர் 13) 9 மணியளவில் கதிர்நாயக்கன்பாளையம் லட்சுமி நகரிலுள்ள குடியிருப்புக்குள் நடையைக் கட்டியது. அப்போது, அங்கு புது வீடு கட்டப்பட்டு புதுமனை புகுவிழா நடந்தது. இதனைக் கண்ட காட்டு யானைகள் விழாவைச் சிறப்பிக்க சென்று வாசலில் இருந்த வாழை மரங்களைச் சாப்பிட்டன.
இதையும் படிங்க: யானைகள் இறப்பதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? - நீதிமன்றம் கேள்வி