கோவை மாவட்டம் செகுடந்தாளி பகுதியில் உயர் மின் கோபுரங்களினால் பாதிக்கப்பட்டு உள்ள விவசாய நிலங்களில் முன்னாள் ஐஏஎஸ் அலுவலரும காங்கிரஸ் பிரமுகருமான சசிகாந்த் செந்தில் பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், "உயர் மின் கோபுரங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ள அளவை ரேடியேசனை விட இப்பகுதியில் அதிகமாக உள்ளது.
இதனால் இப்பகுதி மக்களுக்கு கேன்சர் வர வாய்ப்புள்ளது. விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். புதைவடம் வழியாக மின்சாரத்தை எடுத்துச் செல்ல வேண்டும்.
மத்திய அரசு இப்பிரச்னைகள் குறித்து மக்களிடம் பேசி சுமூக முடிவு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.