பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மகேந்திரனுக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இன்று நெகமம், ஆனைமலை, ஜமீன் ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது, 'மத்தியில் வலுவான ஆட்சியை அமைக்க அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைத்தது முதல் வெற்றி. அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைத்தது ஸ்டாலினுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது' என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், அதிமுக கூட்டணி பார்த்து சந்தர்ப்பவாத கூட்டணி என்று ஸ்டாலின் பேசுகிறார். ஆனால் கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு, தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படுவதுதான் சந்தர்ப்பவாத கூட்டணி என்று விமர்சித்துள்ளார்.