சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மகேந்திரனுக்கு ஆதரவாக உடையாம்பாளையம் பகுதியில், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”அரசியல் என்பது மற்றவர்களுக்கு வியாபாரம். ஆனால் எங்களைப் பொறுத்தவரை கலைச் சேவை செய்து விட்டு, மக்களுக்கு சேவை புரிய வந்துள்ளோம். மஞ்சள் பையுடன் வந்தவர்கள் எல்லாம் தற்போது கோடி கோடியாய் சம்பாதிக்கின்றனர்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில், பணியின்போது காவலர்கள் இறந்தால் நிதி அளிக்கப்படும் என்று தெரிவித்துவிட்டு, மறுபுறம் காவல்துறையினரை மிரட்டி வருகின்றனர். அனைவரும் ஒன்று சேர்ந்து வெள்ளையனை வெளியேற்றியது போல், தற்போது ஒன்று சேர்ந்து திமுக அதிமுகவை வெளியேற்ற வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: அடிப்படையே சரியில்லாதபோது மற்றவற்றை எப்படி சிந்திப்பது? திருநெல்வேலி திமுக வேட்பாளருடன் ஒரு நேர்காணல்...