ETV Bharat / city

ஆம்பூர் பாலாற்றில் மணல் கடத்தல் - 6 மாட்டு வண்டிகள் பறிமுதல்: இருவர் கைது!

திருப்பத்தூர்: பாலாற்றில் கள்ளத்தனமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 மாட்டு வண்டிகள் உட்பட 1 டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Sand Theft Bullack Cart seized in Ambur
Sand Theft Bullack Cart seized in Ambur
author img

By

Published : Aug 21, 2020, 5:27 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் பாலாற்றில் நள்ளிரவில் அனுமதியின்றி மணல் கடத்துவதாக பொதுமக்கள், தன்னார்வலர்கள் மாவட்ட ஆட்சியர் சிவனருளுக்கு புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஆம்பூர் வட்டாட்சியர் பத்மநாபன் தலைமையிலான வருவாய்த்துறையினர் கடந்த இரண்டு நாள்களாக மின்னூர், ஆலாங்குப்பம் பாலாற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அலுவலர்கள் வருவதை முன்கூட்டியே சில அலுவலர்கள் மூலம் தகவல் பரிமாறுவதை அறிந்த வட்டாட்சியர் நேற்று தனியாக இருசக்கர வாகனத்தில் தலைக் கவசம் அணிந்து பாலாற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, அவ்வழியாக மணல் கடத்தி வந்த ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்த மஞ்சுநாதன் என்பவருக்கு சொந்தமான ட்ராக்டர், ஆலாங்குப்பம் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான 2 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்தார்.

அதேபோல், பெரியவரிக்கம் பகுதியைச் சேர்ந்த துரை, இன்பநாதன், முரளி, ராஜேஷ் ஆகியோருக்கு சொந்தமான ஆறு மாட்டு வண்டிகளையும் வட்டாட்சியர் பத்மநாபன் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.

இதனிடையே, மணல் கடத்தல் கும்பல் வட்டாட்சியரை முற்றுகையிட்டதால் சிறிது நேரம் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது

பின்னர் இது குறித்து தகவலறிந்து ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மணல் கடத்தல் கும்பலிடமிருந்து வட்டாட்சியரை மீட்டனர்.

இதைத் தொடர்ந்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட ஆலாங்குப்பம் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் ராஜேஷ் ஆகிய இருவரை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவான பெரியவரிக்கம் பகுதியைச் சேர்ந்த துரை இன்பநாதன், முரளி, ராஜேஷ் சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாதன் ஆகியோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ஆம்பூர் சுற்றியுள்ள ஆலாங்குப்பம் சோலூர், மின்னூர், சோமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நள்ளிரவில் மணல் கடத்தல் நடப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும் உள்ளூரில் உள்ள சில அலுவலர்களின் உதவியுடன் மணல் கடத்தல் மற்றும் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்து வருகிறது.

வட்டாட்சியர் போன்ற உண்மையான அலுவலர்களுக்கு இது போன்ற நிலைமை ஏற்படுவதை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள், தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.