ETV Bharat / city

நகை வியாபாரியிடம் 2 கிலோ தங்கம், ரூ.7 லட்சம் பணம் வழிபறி - குற்றச் செய்திகள்

கோயம்புத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற நகை வியாபாரியிடம் 2 கிலோ தங்க நகைகள், 7 லட்சம் ரூபாய் பணத்தை வழிப்பறி செய்தவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி
author img

By

Published : Nov 2, 2021, 11:56 AM IST

கோயம்புத்தூர்: வடவள்ளி பகுதியில் தங்க நகைகளை ஹால்மார்க்காக மாற்றி தரும் பணியில் ஈடுபட்டு வருபவர் சண்முகம். இவர் கடந்த சனிக்கிழமை (நவ.30) சத்தியமங்கலத்தில் இருந்து தங்க நகை வியாபாரிகளிடம் இருந்து இரண்டு கிலோ எடையளவில் தங்க நகைகளை ஹால்மார்க் முத்திரை பெற்று தருவதற்காக வாங்கி வந்துள்ளார்.

பேருந்தில் வந்த அவர் பின்னர் இருசக்கர வாகனம் மூலம் காந்திபுரத்தில் இருந்து வடவள்ளிக்குச் சென்று கொண்டிருந்த போது, அவரை பின்தொடர்ந்து வந்த நபர்கள் வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையிலுள்ள தனியார் பள்ளி முன்பாக அவரை தாக்கி நகைகளையும், பணத்தையும் பறித்துச் சென்றனர்.

நகை கொள்ளை

இந்த சம்பவம் குறித்து சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் வடவள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சண்முகத்திடம் இருந்து இரண்டு கிலோ தங்க நகைகள், 7 லட்சம் ரூபாய் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் வழிப்பறியும் செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

சிசிடிவி காட்சி

இதில் நடுரோட்டில் வைத்து சண்முகத்தை தாக்கி விட்டு நகை, பணம் இருக்கும் பையை பிடிங்கி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் இருக்கும் வேறு சில கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளையும் வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பாட்னா தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: 4 பேருக்கு மரண தண்டனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.